000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a கூடுமுகம் - அடியவர் |
300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a கூடுமுகத்தில் காட்டப்பட்டுள்ள ஆண் உருவம் - அடியவர் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a கோயில் கட்டடக் கலையில் விமானத்தின் கூரை உறுப்புகளுள் ஒன்றான கொடுங்கையில் (கபோதம்) அமைக்கப்படும் நாசிகையில் (நாசி போன்று துவாரத்துடன் அமைக்கப்படும் ஒரு உறுப்பு) உள்ள கூடு முகத்தில் ஆண் உருவம் ஒன்று மார்பளவு வரை காட்டப்பட்டுள்ளது. இவர் கந்தர்வராய் இருக்கலாம். கந்தர்வர்கள் என்போர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பதினான்கு கணங்களில் ஒரு இனக்குழுவாவர். இவர்கள் கந்தருவ லோகத்தில் வசிக்கின்றார்கள்.இவர்கள் மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் தொடர்பாக இருப்பவர்கள். இவர்கள் எப்பொழுதும் மகிழ்வாக பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் இருப்பார்கள். ஆடல் கலையில் வல்லவர்களாகவும், யாழ் போன்ற இசைக்கருவிகளை மீட்கும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகின்றனர். சித்தரம், நடனம், இசை போன்ற கலைகள் கந்தர்வ வேதம் என்று அழைக்கப்பெற இவர்களே காரணமாகும். அரம்பையர்கள், கந்தவர்களுடன் ஆடல் பாடல்களில் ஈடுபடுவர். ஜடாபந்தம் தலையலங்காரமாய் உள்ளது. தோள்களின் இருபுறமும் விரிந்த குழல் கற்றைகள் காணப்படுகின்றன. மார்பில் சரப்பளி என்னும் பட்டையான அணி அழகு செய்கின்றது. தலையை ஒரு சாய்த்து உள்ளார். காதுகளில் மகர குண்டலங்கள் விளங்குகின்றன. ஆடலிலும் இசையிலும் வல்லவரான சிவனார் கோயிலில் அக்கலைக்கான அரம்பையரும், கந்தருவரும் காட்டப்பட்டுள்ளனர் என்பது சிறப்பு. |
653 | : | _ _ |a கந்தர்வர், நாசிகை, சூத்திர நாசிகை, அல்ப நாசிகை, கூடு முகம், பாண்டியர் குடைவரை, கழுகு மலை, கழுகு மலை வெட்டுவான் கோயில், முற்காலப் பாண்டியர் கலைப்பாணி, பாண்டியர் ஒற்றைத் தளி, பாண்டியர் கலைகள், பாண்டிய நாடு, பாண்டியர், பாண்டிய மண்டலம் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கழுகு மலை வெட்டுவான் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கழுகு மலை |d தூத்துக்குடி |f கோவில்பட்டி |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
914 | : | _ _ |a 9.15296112 |
915 | : | _ _ |a 77.70432074 |
995 | : | _ _ |a TVA_SCL_000205 |
barcode | : | TVA_SCL_000205 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |